கடவுள் அமைத்து வைத்த மேடை

இன்றுந்தன் பிறந்த தினம்
இன்னும் நாம் மறக்கவில்லை
இறந்துமெம் நினைவில் நின்றாய்
இறுதிவரை நீ இருப்பாய்
அன்றெந்தன் அக்காவானாய்
பின் மக்கள் உறவைத் தந்தாய்
இன்றவர்கள் எனை மறந்தார்
இதுவுந்தான் கடந்து போகும்
அன்றொரு நாள் நீயும் சொன்ன
அர்த்தங்கள் புரிந்து கொண்டேன்
உறவுகள் தூரப் போகும் என்ற
உண்மை நான் உணர்ந்ததுண்டு
நினைவிலே நீக்கி வைப்பார்
என்றுதான் நினைத்த தில்லை
உலகிலே இதுவும் உண்மை
என்பதை உணர்ந்த பின்னர்
உள்ளந்தான் உடைந்ததக்கா
உலகில் நீயிருந்திருந்தால்
உன்னிடம் முறையிடுவேன்
இன்று நான் என்ன செய்வேன்?






1108 2000 61 J.SANGIYA