Thursday, 15 September 2022

குடும்ப அங்கத்தவர் வாழ்த்துகள்

இன்றுந்தன் பிறந்த தினம் 

இன்னும் நாம் மறக்கவில்லை 

இறந்துமெம் நினைவில் நின்றாய் 

இறுதிவரை நீ இருப்பாய்


அன்றெந்தன் அக்காவானாய் 

பின் மக்கள் உறவைத் தந்தாய் 

இன்றவர்கள் எனை மறந்தார் 

இதுவுந்தான் கடந்து போகும் 


அன்றொரு நாள் நீயும் சொன்ன 

அர்த்தங்கள் புரிந்து கொண்டேன் 

உறவுகள் தூரப் போகும் என்ற

உண்மை நான் உணர்ந்ததுண்டு 


நினைவிலே நீக்கி வைப்பார் 

என்றுதான் நினைத்த தில்லை 

உலகிலே இதுவும் உண்மை 

என்பதை உணர்ந்த பின்னர் 


உள்ளந்தான் உடைந்ததக்கா 

உலகில் நீயிருந்திருந்தால் 

உன்னிடம் முறையிடுவேன் 

இன்று நான் என்ன செய்வேன்?




எண் பத்து நான்கில் எடுத்தடி வைக்கும்
மண் பற்று மாறா மைந்தன் உன் மனதில்
ஆலடிப் பிள்ளைக்கும் அவன் அன்னையாம்
காளிக்கும் ஊழியம் செய்வதில் உனக்குள்ள
பற்றினை மேவிய பக்தியை நாம் அறிவோம்;
காளிக்கு முன்னால் கைகூப்பி வணங்குமுன்
சீரிய சித்திரம் கிடைத்ததனால்; அதிலோர்
பாரிய மாற்றம் ஏதுமின்றி உன் படம் பதித்திட
என் மகன் முடிவு செய்ய நானும் வழிமொழிய
நேரிய சித்திரம் நேர்ந்தது காண்; அதிலெம்
கூடிடும் வாழ்த்துக்கள் எங்களின் உள்ளங்கள்
கூறிடும் வார்த்தைகள் என்றென்றும் வாழுங்கள்

https://youtu.be/4O_j0fFFb7I

No comments:

Post a Comment