Thursday, 15 September 2022

குடும்ப அங்கத்தவர் வாழ்த்துகள்

 



கடவுள் அமைத்து வைத்த மேடை







அன்னை


அன்னை அவள் என்னை தினம் மண்ணில் சுமந்தாள்
என்னை அவள் எண்ணி தினம் எண்ணம் மகிழ்ந்தாள்
பின்னை அவள் என்னை விட்டு விண்ணில் பறந்தாள்
இன்னும் அவள் என்மனதில் தன்னை வளர்த்தாள்.


சிறகு விரித்துப் பறவை போல
வானில் பறக்க விரும்பினேன்,
இன்று அந்த வானமே நான்
என்று அறிந்த பின்னாலே
விருபங்கள் அழிந்தன!
விளக்கங்கள் அறிந்தன!



என் காதல் நீ
என் காதலி
உன் காதல் நான்
உன் காதலன்.


செவ்வானத்தில் ரெண்டு செந்தாமரை
என்கண்கள் கொண்டாடுமே
ஒன்றை ஒன்று அன்று பிரிந்ததில்லை
என்நெஞ்சில் நின்றாடுமே
காலங்கள்தான் மாறிவிடும் கண்ட
காட்சிகள் என்றும் மாறாதம்மா.


செவ்வானம் போலே சிவந்தது வானம்
செந்தாலம் பூவே நீ சென்றது எங்கே
வந்தாடும் காதல் மரங்களின் மேலே
நின்றாடும் நினைவுகள் நீ சென்றாலும்.

குடும்ப அங்கத்தவர் வாழ்த்துகள்

இன்றுந்தன் பிறந்த தினம் 

இன்னும் நாம் மறக்கவில்லை 

இறந்துமெம் நினைவில் நின்றாய் 

இறுதிவரை நீ இருப்பாய்


அன்றெந்தன் அக்காவானாய் 

பின் மக்கள் உறவைத் தந்தாய் 

இன்றவர்கள் எனை மறந்தார் 

இதுவுந்தான் கடந்து போகும் 


அன்றொரு நாள் நீயும் சொன்ன 

அர்த்தங்கள் புரிந்து கொண்டேன் 

உறவுகள் தூரப் போகும் என்ற

உண்மை நான் உணர்ந்ததுண்டு 


நினைவிலே நீக்கி வைப்பார் 

என்றுதான் நினைத்த தில்லை 

உலகிலே இதுவும் உண்மை 

என்பதை உணர்ந்த பின்னர் 


உள்ளந்தான் உடைந்ததக்கா 

உலகில் நீயிருந்திருந்தால் 

உன்னிடம் முறையிடுவேன் 

இன்று நான் என்ன செய்வேன்?




எண் பத்து நான்கில் எடுத்தடி வைக்கும்
மண் பற்று மாறா மைந்தன் உன் மனதில்
ஆலடிப் பிள்ளைக்கும் அவன் அன்னையாம்
காளிக்கும் ஊழியம் செய்வதில் உனக்குள்ள
பற்றினை மேவிய பக்தியை நாம் அறிவோம்;
காளிக்கு முன்னால் கைகூப்பி வணங்குமுன்
சீரிய சித்திரம் கிடைத்ததனால்; அதிலோர்
பாரிய மாற்றம் ஏதுமின்றி உன் படம் பதித்திட
என் மகன் முடிவு செய்ய நானும் வழிமொழிய
நேரிய சித்திரம் நேர்ந்தது காண்; அதிலெம்
கூடிடும் வாழ்த்துக்கள் எங்களின் உள்ளங்கள்
கூறிடும் வார்த்தைகள் என்றென்றும் வாழுங்கள்

https://youtu.be/4O_j0fFFb7I